திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை நீர் வள ஆதார அமைப்புத் துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை செப். 23 –

 

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை நீர் வள ஆதார அமைப்புத் துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் இன்று (22.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டத்தில் உள்ள போளுர் பெரிய ஏரிக்கு ஐவ்வாது மலையில் பட்டரைகாடு எனும் இடத்தில் உற்பத்தியாகி சுமார் 16 மி.க.அடி மஞ்சளாற்றின் வழியாகவும் மற்றும் மேல்செய்யாறு அணைகட்டிலிருந்து 9 மி.க.அடி போளுரான் கால்வாய் வழியாகவும் இவ்வேரிக்கு நீர்வரத்து பெறுகின்றது.

மேலும் இவ்வேரியில் மொத்தம் 3 மதகுகள் வழியாக 1110 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவ்வேரியில் இரண்டு கலிங்கல்கள் (கோடி) உள்ளது. முதல் கோடி மூலம் செல்லும் உபரி நீரானது ஜாப்ராபேட்டை மற்றும் வெண்மணி ஆகிய ஏரிகளுக்கு சென்றடைந்து அதன் மூலம் மேலும் 150 ஏக்கர் கூடுதலாக விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரண்டாவது கோடியிலிருந்து செல்லும் உபரிநீரானது சுமார் 3 மி.க.அடி சென்று செய்யாற்றில் கலக்கின்றது. போளுர் பெரிய ஏரி முழு கொள்ளளவை அடைவதன் மூலம் விவசாய விளை நிலங்கள் மட்டுமின்றி நீர்நிலைகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் கால்நடைகளின் குடிநீர் தேவையை பெரிதும் பூர்த்தி செய்கின்றது அதுமட்டுமின்றி போளுர் சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3500 குடும்பங்களுக்கு சுமார் 20,000 மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது.

ஏரியின் நீரியியல் விவரங்கள்
மதகுகளின் எண்ணிக்கை : 3 எண்கள்
கலிங்கல்கள் (கோடி) எண்ணிக்கை : 2 எண்கள்
ஏரிகரையின் நீளம்   : 1127.76 மீட்டர்
போளுரான் கால்வாயின் நீளம்   : 9000 மீட்டர்
மஞ்சளாற்று கால்வாயின் நீளம்   : 12000 மீட்டர்
மொத்த ஆயக்கட்டு   : 1110 ஏக்கர்
ஏரியின் மொத்தக்கொள்ளளவு   : 138.45 மில்லியன் கன அடி
ஏரியின் நீர்பிடிப்பு பரப்பளவு   : 1.97 சதுர கிலோமீட்டர் 487.00 ஏக்கர்
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் மத்திய பெண்ணையாறு வடி நிலக்கோட்டம் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் (ஆரணி கோட்டம்). வடிவேல், உதவி பொறியாளர் (போளுர் கோட்டம்) செல்வராஜ், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here