பாபநாசம், மே. 12 –
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கடைத் தெருவில் தேனீர் விடுதி மற்றும் சிற்றுண்டியும் வைத்து நடத்தி வருபவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள 42 வயதுடைய வசுமித்ரன். மேலும் இவர், பள்ளிப் பருவத்தில் ஆர்வத்துடன் பழைய நாணயங்களை சேகரிக்கத் தொடங்கி தற்போது வரை கடந்த முப்பது ஆண்டுகளாக முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளின் ரூபாய் நோட்டு முதல் 500 க்கும் மேற்பட்ட பழைய நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளார். குறிப்பாக மன்னர்கள் காலத்து நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.
மேலும் வசுமித்ரன் அவற்றை யெல்லாம் பத்திரப் படுத்தி பெட்டியில் வைத்து பூட்டி வைக்காமல் இன்றளவும் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதனைக் காணும் படி காட்சிப்படுத்தி வருகிறார். அப்போது வாடிக்கையாளர்கள் அதனை ஆச்சரியத்துடனும், அதிசயமாகவும் பார்க்கும் போது, வசுமித்ரன் அவர்களின் முகம் கண்டு ஆனந்தம் கொள்வதாக அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் இதனை இச்சிறிய வட்டத்திற்குள் அடக்கி விடாமல், பள்ளி கல்லுரி மாணவர்களுக்கும் இதனைக் காட்சிப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு தொடர் முயற்சிகளை தான் எடுத்து வருவதாக தெரிவிக்கின்றார்.
மேலும் தனக்கு போதிய பொருளாதார வசதிகள் இல்லாததால், காலம் கடந்து செல்வதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றார். மேலும் தனக்கு அரசு சார்பில் உதவிகள் செய்தால் தான் கல்விப்பயிலும் மாணவர்களுக்கு இதனை காட்சிப்படுத்த வசதியாக இருக்கும் என்றவாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இன்றளவும் மிக ஆர்வத்துடன் அவர் பழங்கால நாணயங்கள், அரிய வகை ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார். இதுவரை ஒரு பைசா, பத்து பைசா, 25 பைசா, மன்னர்கள் காலத்து நாணயங்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட நாணயங்கள் வரை சேகரித்து கடையில் வைத்து தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதனைக் காட்சிப் படுத்து விவரித்தும் மனம் மகிழ்ந்தும் வருகிறார்.
பேட்டி:
வசுமித்ரன்
தேனீர் மற்றும் சிற்றுண்டி விடுதி உரிமையாளர்
தம்பட்டம் செய்திக்காக பாபநாசம் செய்தியாளர் தீனா



















