கும்பகோணம், மார்ச். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் சீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. மேலும் 108 வைணவ தலங்களில் 20 வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14 வது திவ்ய தேசமாகவும் இத்திருக்கோயில் போற்றப்படுகிறது.

மேலும் இத்தலத்தில், ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் பத்து நாட்கள் வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டு பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. அந்நிகழ்வினைக் காண வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து, தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்காம் நாளான 20ம் தேதி புதன்கிழமை மாலை பிரசித்தி பெற்ற கல்கருட சேவையும், , ஸ்ரீ பெருமாள் கருட வாகனத்திலும் தாயார் அன்னபட்சி வாகனத்திலும் ஓலைச் சப்பரம் திருவீதி உலா நடைபெறுகிறது. 9 ஆம் நாளான 25 ஆம் தேதி திங்கட்கிழமை திருத்தேரோட்டமும், நடைபெறுகிறது. மேலும் 10 ஆம் நாளான 26 ஆம் தேதி சப்தாவர்ணத்துடன் இவ்வாண்டுக்கான இவ்விழாவை நிறைவு பெறுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here