PIC FILE COPY

திருவண்ணாமலை. ஜூலை.23-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் வேளாண் இணை இயக்குநர் பாலா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை ரூ.40 கமிஷன் வாங்குகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஏரிகளில் வண்டல் மண் அடித்தல் அனுமதி விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. செங்கல் சூளை நடத்துபவர்களுக்கே தாசில்தார்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு வழங்குகிறார்கள்.

யூரியா மூட்டை சரியாக கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசின் கிசான் திட்டம் மூலம் ஊக்கத்தொகை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது பரிசீலனை என்ற பெயரில் தகுதியானவர்களுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே தகுதியானவர்களுக்கு கிசான் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை கிடைக்க அரசு நட்வடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here