கும்பகோணம், ஜன. 7 –

கும்பகோணத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுக்கா மாநாடு பாலாஜி மஹாலில் மாவட்ட ஆலோசகர் குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்த்தன் மாவட்ட தலைவர்கள் குமணன், தங்கையன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தரமான விலை மலிவான தடையில்லா சிக்னல் வழங்க வேண்டும். இன்டர்நெட் வசதி தொடர்ந்து வழங்க வேண்டும். கொரோனா  மழை வெள்ள பாதிப்பு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கட்டும் தொகையை தமிழக முதல்வர் தள்ளுபடி செய்ய வேண்டும்.வேறு மாநிலத்திலிருந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here