திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த 37 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டு சான்றிதழ் கொடுத்து கௌரவித்தார்,
திருவள்ளூர், செப் . 8 –
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகள் பொதுமக்கள் கூடும் இடங்கள் தடுப்பூசி முகாம் அமைத்தும் தடுப்பூசி செலுத்த கோரியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்,
அந்த வகையில் கடந்த 3 ந் தேதி மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, 384 மையங்களில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் 58 ஆயிரத்து 141 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தனர்,
அதில் குறிப்பாக பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரிட்டிவாக்கம் ஊராட்சி கிராம மக்கள் 100 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர், அதேபோன்று மாவட்டத்தில் 37 ஊராட்சி மன்ற கிராம மக்கள் 100% தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் அந்த ஊராட்சி மன்ற தலைவரை கௌரவிக்கும் வகையில் 37 ஊராட்சி மன்ற தலைவர்களை கெளரவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டு சான்றிதழ் கொடுத்து இன்று கௌரவப்படுத்தினார்,
அதற்கு முன்பாக பூண்டி அடுத்த பேட்டிரிவாக்கம் கிராமத்தில் 100% தடுப்பூசி எடுத்துக் கொண்டதை பாராட்டும் வகையிலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வகையில் இருசக்கர பேரணியானது மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து பேரிட்டிவாக்கம் கிராம ஊராட்சியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 18 கிலோ மீட்டர் வரை இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்,
அப்போது நூறுநாள் பணியாற்றும் பெண்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதை பார்த்து மாவட்ட ஆட்சியர் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு மாஸ்க் கொடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறீர்களா கேட்டறிந்தார்,
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் செலுத்திக் கொண்டு இருப்பதாகவும், 10 லட்சம் மக்கள் இன்னும் கொரோனா தடுப்பூசி போட வேண்டி இருப்பதாகவும், மாவட்டத்தில் இதுவரை 47.1 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாகவும், இன்னும் 53 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பதாகவும் , அவர்கள் வருகின்ற 12ஆம் தேதி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 1 லட்சம் என்ற இலக்கு கொரோனா தடுப்பூசி போட முகாம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட முன் வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்,



















