திருவண்ணாமலை, அக்.26-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண் காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப் பட்ட தடையை 02.11.2021 வரை தொடர்ந்து நீட்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும், மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட அட்சித் தலைவர் பா. முருகேஷ், தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here