கும்பகோணம் அருகே திருச்சேறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்டவுதவிகள் வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்..
கும்பகோணம், டிச. 13 –
கும்பகோணம் அருகே திருச்சேறையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க நேற்றும் இன்றும் பல்வேறு இடங்களில் அமமுகவினர் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவுகள் வழங்கப்பட்டு தினகரன் பிறந்த நாளை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் பகுதியாக திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு சக்கரைப் பொங்கல் வென்பொங்கல் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் கடைவீதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திருச்சேறை சுடர் மாற்றுத்திறனாளி பள்ளியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு நோட்டு பேனா போன்ற கல்வி உபகரண நலத்திட்டவுதவிகளை மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி தலைமையில் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெகன் விஜய்பாலன் உதயகுமார் அமைப்புச் செயலாளர் பொன் த மனேகரன் மகளிரணி ஒன்றிய செயலாளர் உமா மாவட்ட நிர்வாகி ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகள் நோட்டு பேனா மற்றும் மதிய உணவு வழங்கினார்கள்.