pic: file copy
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள துணிக் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுக்க புகை மூட்டம் காணப் பட்டது. அருகே இருந்த குடியிருப்பில் இருந்த பெண் ஒருவருக்கு அப் புகை மூட்டத்தால் மூச்சுத் தின்றல் ஏற்பட்டு அரசு அவசர ஊர்தி வர வழைக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கரும்புகையுடன் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அனைத்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31-
சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூரில் முருகேசன் என்பவர்க்கு சொந்தமான துணி கடை உள்ளது. வழக்கம் போல் இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு அடையாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடையில் இருந்து கரும்புகையுடன் கூடிய தீ பரவியதை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினர்க்கும் அருகில் உள்ள திருவான்மியூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு திருவான்மியூர் மற்றும் கிண்டியிலிருந்து 8 தீயணைப்பு வீரர்கள் துணிக் கடையில் எரியும் தீயை அனைக்க முடியாமல் தினறினர். பின்னர் கரும்புகைக்குள் புகுந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்து மீன்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் கடையிலிருந்த ஆடைகள், மற்றும் கடை உள் பகுதி முழுவதும் தீக்கரையானதால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருள் சேதமடைந்ததாக தெரிய வருகிறது.
மேலும் தீயினால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸில் வந்த செவிலியர் முதலுதவி கொடுத்த பின்பு மருத்துவனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.