தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த ஆக 29 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் முகம் பொறித்த முகக் கவசம் அணிந்து மாணவ, மாணவியர்கள் 2021 நொடிகள் தொடர் சிலம்பம் சுற்றி உலகச்சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி பயிற்சியை செய்து காட்டினர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
சென்னை, ஆக. 31 –
இந்திய சுதந்திரத்திற்கு முன்பே சர்வதேசப் போட்டியான ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர் மேஜர் தயான் சந்த் என நினைவுக் கூறினார். மேலும் அவர் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை 1956 ஆம் ஆண்டு இந்திய அரசால் பெற்றவர். அவரது புகழினை மக்கள் அனைவரும் அறிகின்ற வகையிலும், இளைஞர்கிளிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்துகின்ற வண்ணம் அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப் படுகிறது. அத்தினத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டிலும் உடல் நலத்திலும் கவனம் செலுத்தி அவர் போன்று சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உலகச் சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதை இத்தினத்தின் கொண்டாட்டத்தின் சிறப்பாகும் அதை நிரூபிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் யூத் ஸ்போட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மாணவ, மாணவியர்களை விளையாட்டில் உற்சாகப் படுத்தவும், அவர்கள் சர்வதேச அளவில் விளையாட்டில் பங்கேற்கவும் பயிற்சிகளையும், பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஆக 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையிலும், ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் பெயருக்கு பெருமைச் சேர்க்கும் வகையிலும் அவரின் முகம் பொறித்த முகமூடி அணிந்து கொண்டு உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிலம்பாட்ட மாணவர்கள் தியான் சந்தின் முகமூடிகளை அணிந்தபடி 2021 நொடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்ச்சியில் 10 வயது மாணவன் தொடர் இசை இசைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதில் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃ ரெக்கார்டு, ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிறுவனத் தலைவர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பசுமை பூமி பவுண்டேஷன் மற்றும் ஆவடி நந்தவன மேட்டூர் பல்லுயிர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாதனை நிகழ்ச்சி நடந்த மைதானத்திலேயே மூலிகை செடிகளை நட்டு வைத்து அதன் சிறப்புகளை குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கூட்டமைப்பு நிறுவனர் விஜயகுமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.