கும்பகோணம், ஏப். 02 –

கும்பகோணத்தில் , இன்று தூய அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாட்களுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி ‘சாம்பல் புதன்’ நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. நெற்றில் சாம்பல் பூசும் நிகழ்வுடன் தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி வாரம் இப்போது நடைபெற்று வருகிறது.

இந்த தவக்காலத்தின் போது, ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இந்த தவக்காலம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்று ( ஏப்ரல்) முதல் தவக்காலத்தின் இறுதி வாரம் தொடங்கிய நிலையில், இந்தக்காலத்தில் சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். அதன்படி இன்று, குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் , இன்று தூய அலங்கார அன்னை பேராலயத்தில் மகாமக குளம் அருகில் தொடங்கிய ஊர்வலத்தை அந்தோணிசாமி தொடக்கி வைத்தார். இதில் கையில் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருவது வழக்கமாக அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ம் தேதி புனித வியாழன் அனுசரிக்கப்படுவதுடன், ஏப்ரல் 7 அன்று இயேசு சிலுவையில் அறையும் நாளான புனித வெள்ளியும், அன்றிலிருந்து 3வது நாளில் வரும் இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை ஏப்.9ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தூய அன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here