மீஞ்சூர், ஆக. 29 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா அம்மா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டூர் ஊராட்சி, இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற  ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால திருக்கோவில் அமைந்து உள்ளது.

இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு அத்திருக்கோயிலுக்கான பல்வேறு சிறப்பு பூஜைக வழிப்பாடுகள் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து யாகசிலையில் இருந்து கடங்களில் புனித நீர் எடுத்து செல்லப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு மேல் கோபுர கலசங்களில் மேல் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிகச்சிற்பாக நடைப்பெற்றது. பின்பு அப்புனித நீர் விழாவினைக் காண வந்த  பத்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு மனமுருகி சாமியை வேண்டிக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காட்டூர் கிராம பொதுமக்கள் மற்றும் ஆலய தர்மகர்த்தா முருகன், சம்பத், செய்திருந்தனர். இதில் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன்  மற்றும் ஏளமான கிராம பொதுமக்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here