கும்பகோணம், பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘அமரன்’. மேலும் அப்படத்தின் கதை, இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அத்திரைப் படத்தில் காஷ்மீர்  மக்களையும் மற்றும் அங்கு வாழும் இளைஞர்களை பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும்  சித்தரிக்கப் பட்டு  எடுக்கப்பட்ட படம் என்றும் கூறுகிறார்கள்.

அதுப் போன்று ரோஜா, தெனாலி, போன்ற தமிழ் திரைப் படங்களில் இஸ்லாமிய மக்களை பயங்கர வாதியாகவும் தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. அதனை கண்டித்து விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தை சேகர் தலைமையில் காந்தி பூங்கா முன்பு நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் படத்தை தீயீட்டு கொளுத்தி செருப்பால் அடித்து அவர்களின் உருவபொம்மையை எரிக்கும் போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

அதில் இளம் தமிழ் புலிகள் கட்சி மாநில துணை அமைப்பாளர் விஜய் ஆனந்த், மகளிர் அணி செயலாளர் வெண்ணிலா சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் மூவேந்தன், மகளிர் அணி செயலாளர் ரமிலா தமிழ் மாறன், ஒன்றிய செயலாளர்கள் முரளி, இளைய பெருமாள், ஒன்றிய தலைவர் ரமேஷ், மாநகர செயலாளர் நாகலிங்கம், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here