திருவள்ளூர்; ஆக, 25- திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலமாக 2019-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர் இரண்டாம்நிலை சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று 25.08.2019 காலை 10.00 மணிக்கு .P.நாகராஜன் காவல்துறைத் தலைவர் வடக்கு மண்டலம் தலைமையிலும், P.அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற் பார்வையில் துவங்கியது.
இத்தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1.ஸ்ரீராம் கல்லூரி, பெருமாள்பட்டு, 2. பிரதியுக்ஷா பொறியியல் கல்லூரி, அரண்வாயல் 3 C.C.C. இந்து மெட்ரிக் பள்ளி, காக்களூர் 4. ஸ்ரீ ஆர்.எம். ஜெயின் வித்யாஷரம் மேல் நிலைப்பள்ளி, திருவள்ளூர் ஆகிய 4 தேர்வு மையங்களில் தேர்வு நடைப் பெற்றது. இதில் பங்களிக்க விண்ணப் பித்த மொத்தம் 7145 நபர்களில் 5943 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினார்கள் 1018 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வு மையங்களில் அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட வண்ணம் அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.