சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சென்னை அசோக் நகரில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை ஏற்று ஆலோசனை வழங்க உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக ஆற்ற வேண்டிய களப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.