திருவள்ளூர், ஆக. 09 –
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் மக்கள் தலைவர் ராகுல்காந்தியின் ஆணைக்கிணங்கவும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின் படி..
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் 75 கிலோமீட்டர் தூர நடைப்பயணம் மாவட்டம் முழுவதும் சுற்றி வர திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்நடைப் பயணம் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் இன்று காலை பெரியபாளையம் பகுதியில் இருந்து துவங்கியது. இந்த பாதயாத்திரையில் 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்தும், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கிக் கொண்டே செல்கின்றனர்.
பெரியபாளையத்தில் காலை தொடங்கிய பாதயாத்திரை மாலை கும்மிடிப்பூண்டி பஜார் வீதிக்கு வந்தடைந்தது. இதில் மாவட்ட தலைவர் ஏ ஜி சிதம்பரம், மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, வட்டார தலைவர்கள் சிவசங்கரன்,மூர்த்தி, மதன்மோகன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.