திருவள்ளூர, பிப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி. அவ்விழாவில் பங்கேற்ற மாவட்டாட்சியர் பிரபு சங்கர் குத்துவிளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.

மேலும் திருவள்ளுர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிப்பானது, கடந்த 15.01.2024 முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள்,‌ ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை குறித்து ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும், மிகச்சிறப்பான விளக்கவுரையின் போது சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து நீண்ட உரையினை சிறப்பு அழைப்பாளர்கள் நிகழ்த்தினார்கள்.

மேலும், அப்போது கடந்த ஐந்தாண்டுகளில் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய மாநகர போக்குவரத்து ஒட்டுநர் மற்றும் தனியார் பள்ளி ஓட்டுனர்களுக்கு  நற்சான்றுகள் வழங்கி அவ் ஓட்டுநர்கள் கௌரவிக்கப் பட்டனர்.

மேலும் அச்சிறப்பு மிகு விழாவில் திருவள்ளுர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், நேரு யுவ கேந்திரா, வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர் கோ.மோகன் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், நகர காவல் ஆய்வாளர், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், வாகன விற்பனையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்று அவ் விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here