திருவள்ளூர் செப் 08 –
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் செயலாளர் சதா பாஸ்கரன்,பொருளாளர் சிட்டி கிருஷ்ணம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்த்தனன், மாவட்ட துணை தலைவர்கள் சத்ய நாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்முருகன், புவனேஸ்வரி, ரவி, மாவட்ட இணை செயலாளர் சுகந்தி ராணிலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமாரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :
மாநில நிதிக்குழு மானியம் முழுமையாக ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தில் அதிக அளவு மின் கட்டணத்திற்கே ஊராட்சி அதிக தொகை ஒதுக்கப்படுகிறது. இதனால் ஊராட்சியில் நிதி இல்லாததால் எந்த அடிப்படை வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து தர முடியவில்லை.
இதனால் நிர்வாக சீர்கேடு ஏற்படுகிறது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார் மனு மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.