திருவள்ளூர், மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து பல்வேறு நல திட்டங்களை செய்து வருகின்றது.

அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 வியாபாரிகளுக்கு ஷெல்டர் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மூலம் ரூபாய் 5.5 லட்சம் மதிப்புள்ள தள்ளுவண்டி, மூன்று சக்கர மிதிவண்டி, இரும்பு தகட்டினால் செய்யப்பட்ட கடைகள், அலுமினிய மேசை ,மற்றும் நாற்காலிகள், துளையிடும் இயந்திரம், இரும்பு அடுப்பு கூடுவை எழுது பொருட்கள், தின்பண்டங்கள், பெட்டி கடையில் விற்பனை செய்ய சிப்ஸ் தயாரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.

மேலும் எச்ஐவி தொற்றால் வாழும் பெண்களுக்கு பிரசவ காலங்களில் பிரசவம் பார்ப்பதற்கு தேவையான உபகரணங்களையும் அரசு பொது மருத்துவமனை கல்லூரிக்கு வழங்கியது,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பிரியா ராஜ் எச்ஐவி கட்டுப்பாட்டு  அலகு கௌரிசங்கர் ஷெல்டர் அறக்கட்டளை நிறுவனர் சாலமன் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here