காஞ்சிபுரம், ஜூன். 05 –
முருகப் பெருமானின் வரலாற்றை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வைர வைடூரிய நகைகள், மலர் மாலைகள், அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து வண்ண மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க வண்ண மயில் வாகனத்தில் வள்ளி தெய்வயானையுடன் முருகப் பெருமானுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து தொடர்ந்து, விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு,நவ வீரர்களுடன் காஞ்சிபுரம் நகரின் 4 ராஜவீதிகளில் வீதி உலா வந்தார்.
வீதி உலா வந்த முருகப் பெருமானை வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

























