மயிலாடுதுறை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை நகராட்சியில் அவசர கூட்டம் காலை தொடங்கி மதியம் 2. மணிவரை தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்ததால் அங்கு வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்த தஞ்சை மண்டல நகராட்சி இயக்குனர் தீடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் பல்வேறு காரணங்களுக்குக்காக இன்று நகரமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் கூட்டப்பட்டது. இன்று நடந்த கூட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்ததால் நகராட்சி செயல்பாடு பற்றி ஆய்வு செய்ய வந்த அதிகாரியான, தஞ்சை மண்டல நகராட்சி இயக்குனரான திருமதி சரஸ்வதி பசியால் மயக்கமடைந்தார்.
அதனால் நகராட்சி மன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட, தஞ்சை மண்டல நகராட்சி இயக்குனர் சரஸ்வதியை அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.. அதனால் தகராட்சி வளாகம் முழுவதும் மிகுந்த பரப்பரப்பு நிலவியது.





















