கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் 10 வது வார்டு காசிராமன் தெரு வாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று அதனை நிறைவேற்றும்வகையில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.50 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய அங்காடி மையத்தைத் திறந்து வைத்தார். அந்நிகழ்ச்சியில் சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண் இயக்குனர் பழனியப்பன், மேலாளர் கோபிநாத், தலைவர் ஆயூப்கான், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாசம், மாநகர துணை மேயர் தமிழழகன், மாநகர அவைத் தலைவர் வாசுதேவன், மாநகர பொருளாளர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர்கள் ஆசைத்தம்பி, மனோகரன், மாமன்ற உறுப்பினர்கள் நடராஜன், தமிழ்செல்வி, ஆனந்த் ராமன், முருகன், கண்ணன், செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களும் திரளான அப்பகுதி வாழ் பொதுமக்களும் அந்நிகழ்வில் பங்கேற்று விழாவிற்கு சிறப்புச் சேர்தனர்.






















