காஞ்சிபுரம், செப். 01 –
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350 இடங்களில் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி வழங்கியிருந்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினார்கள்.
தொடர்ந்து, ஏகாம்பரநாதர் குமரகோட்டை முருகன் கோவில் காமாட்சி அம்மன் சன்னதி தெரு உள்ளிட்ட மிகப்பெரிய கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு தீபதாரதனை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் வித விதமான பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனுமதி வழங்கிய இடங்களில் மட்டும் விநாயகர் சிலை வைக்கப் பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.