pic file copy
ஊத்துக்கோட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்டபட்ட பகுதியான செங்குன்றம் ஆதித்தனார் நகரில் வசிப்பவர் ஏழுமலை என்பவரின் மகன் ஜெயவேல் வயது 46 அதேப்பகுதியில் உள்ள சூளைமேனி எனும் இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அமர்சந்த் என்பவரின் மகன் மாணிக்சந்த் என்பவர் கணேஷ் என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வந்துள்ளார்.
இக்கடையில் ஜெயவேல் என்பவரின் மைத்துனர் சென்னகாரணி எனும் இடத்தில் வசித்து வருகிறார். அவர் மூலமாக தனக்கு சொந்தமான 18 சவரன் நகையை குடும்பத் தேவைக்காக மாணிக்சந்த் கடையில் அடமானம் வைத்து அதன் பேரில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை 6 மாதங்களுக்கு முன்பாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப் மாதம் 28 ஆம் தேதியன்று தனது நகையை திரும்ப மீட்பதற்காக பணம் மற்றும் அவர் தந்த ரசீதை எடுத்துச் சென்றுப் பார்த்தபோது, கடை மூடி கிடப்பது தெரிய வந்துள்ளது. இதன் பேரில் அங்குள்ள அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துவுள்ளார்.
அதுத் தொடர்பாக அவர்கள் கணேஷ் அடகுக்கடை உரிமையார் கடந்த ஆறுமாதங்களுக்கு அவர் முன்பாகவே குடியிருந்த வீடு மற்றும் கடையை மூடிவிட்டுச்சென்று விட்டார் என்ற தகவல் அவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இப் பிரச்சினைக் குறித்து ஜெயவேல் மேற் கூறியப்படி புகார் மனுவில் தெரிவித்து மேலும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றியவர் மீது சட்டவடிக்கை எடுக்கும்படி தெரிவித்து, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மேற் கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.




















