எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் என நூற்றுக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை துறைமுகத்தில் மூரிங் பிரிவு தொழிலாளர்கள் தங்களை விட கூடுதலாக ஊதியம் பெறுவதாகவும், ஆனால் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் தங்களுக்கு இன்னும் காமராஜர் துறைமுகத்தில் மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாகவும், குற்றம் சாட்டினார்கள்.
அதனால் தற்போது நாட்டில் நிலவி வரும் விலைவாசி ஏற்றத்தால் தங்கள் குடும்பத்தை வழி நடத்துவதில் பெருத்த சிரமம் ஏற்படுவதாகவும், மேலும் நாங்கள் அனைவரும் உயிரை பணையம் வைத்து வேலை செய்து வரும் தங்களுக்கு இந்த சம்பளம் மிக குறைவானதாகவும் வேலைக்கேத்த ஊதியமாக இல்லாததாக உள்ளது என முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், காமராஜர் துறைமுகத்தில் பணி செய்யும் மூரிங் பிரிவு தொழிலாளர்களுக்கு தகுந்த சம ஊதியம் வழங்க நிர்வாகத்தை வலியுறுத்தி அதனை நிறைவேற்றிக் கோரிக்கை விடுத்தும் அவர்கள் முற்றுகை போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள்.
அதனால் அதானி துறைமுகம் முதல் காமராஜர் துறைமுகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வரிசையாக நிற்கின்றனர். அதனால் ஏற்படும் பதட்டநிலையை தவிர்த்திடும் வகையில் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.





















