கும்மிடிப்பூண்டி, ஏப். 10 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் தினேஷ் நண்பர்கள் குழுவினர் சார்பில் நடத்திய மாபெரும் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாமில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
அப்போது ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய மாற்றுத்திறனாளியை அழைத்து அவரை வெகுவாக பாராட்டி அவருக்கு சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியது பார்ப்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், ரஞ்சித்குமார், திரைப்பட நடிகர் சம்பத்ராம் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள். துணை வட்டாட்சியர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் தினேஷ்குமார் நண்பர்கள் குழுவினர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுக்கு சிறப்பாக அமைய சென்னை ராஜீவ்காந்தி பொதுநல மருத்துவமனை மருத்துவர் நிறைமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பெறும் பங்குவகித்தார்கள்.























