காஞ்சிபுரம், பிப். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அருகே அமைந்துள்ள சரிகை ஆலை வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்க விழா உள்ளிட்ட அண்ணா பட்டு கூட்டுறவு சங்க புற அமைப்பு பணிக்காக ரூ .3 கோடி மதிப்பில் பணி மற்றும் முருகன் பட்டு கூட்டுறவு சங்க புதிய கட்டிடம் ரூ. 65 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கட்ட டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் குறு,சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆகியோர் வருகை தந்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் ..

பிரதமர் மோடி மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர தடையாக இருப்பதாக கூறியதுக் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சற்று கோவம் அடைந்த அமைச்சர் காந்தி பிரதமர் எந்தெந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடையாக இருந்தது என குறிப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும் அதனை விட்டுவிட்டு, பொத்தம் பொதுவாக குறிப்பிடுவது பிரமர் பதவிக்கு அழகல்ல என்றார்.

மேலும் தொடர்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்த பொழுது காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் தென் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என மோடியிடம் கேள்வி எழுப்பினீர்களா நீங்கள் என அப்போது அவர் வினவினார். மேலும் பிரதமரை எல்லா மாநிலத்திற்கும் வெள்ள நிவாரணவுதவிக் கொடுக்கிறீர்களே, ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் தர மறுப்பதேன் என கேட்டீர்களா ? . எந்தெந்த திட்டம் என்று சொன்னால், நாங்கள் அனைத்திற்கும் பதிலளிக்க தயாராகயிருக்கிறோம் எனவும், மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மக்களுக்கு பணம் தராமல் பாக்கி வைத்திருக்கிறார்களே ஒன்றிய அரசு அதற்கு அவர்களின் பதலென்ன ? ஆனால் மக்களுக்கு மத்திய அரசாங்கம் நிதி தரவில்லை என்பது கூட தெரியாமல் எங்களை குறை கூறுகிறார்கள் எனபதுதான் தற்போதைய எதார்த்த நிலை என்றும்,

மேலும் வளர்ந்த மாநிலங்கள் பட்டியில் தமிழ்நாடு சேர்ந்து விட்டது எனக் கூறி ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் கூட கொடுப்பது கிடையாது எனவும், ஆனால் கூட்டுறவு கடைகளில் தரவில்லை என மக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்துவது யார் ? மேலும் இது அரசுவிழா அதனால் அவற்கள் கூறும் அரசியல் குற்றச்சாட்டுக்கெல்லாம் நாங்கள் பொதுக்கூட்ட மேடையில் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here