கும்மிடிப்பூண்டி, ஏப். 10 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமர் கோவில் இக்கோவிலில் இன்று ஶ்ரீராம நவமியை நாளை முன்னிட்டு ஶ்ரீராமர் சீதா தாயாருக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருக் கல்யாணத்திற்காக மேளதாளம் முழங்க பட்டாச்சார்யார்கள் புடைசூழ சீதா தாயார் சமேதமாக ஶ்ரீராமபெருமான் மணமேடைக்கு வந்தடைந்தார்.
இதை தொடர்ந்து ஆறு முறை மாலை மாற்றும் சடங்கு நடந்தேறியது. பாரம்பரிய சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டதை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ஶ்ரீராமர் சீதா தாயார் சமேதரமாக வீற்றிருக்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு இதனை தொடர்ந்து கெட்டிமேளம் முழங்க சீதா தாயாருக்கு பட்டாச்சார்யார்கள் திருமாங்கல்யத்தை சூட்டினர். இதையடுத்து ஶ்ரீராமபெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ,கோவிந்தராசன், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம், திருவள்ளுர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கட சுப்புராஜீ, வடக்கு மாவட்டசெயலாளர் டூபாண்ட் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.























