பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த வசுந்தரா அடுத்து விக்ராந்துடன் பக்ரீத் படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி…

பக்ரீத் படம் பற்றி?

ஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதற்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். இதிலும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். மேக்கப் போடாமலே நடித்துள்ளேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்த படத்தை இயக்குகிறார். எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். தயாரிப்பு துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ரசிகர்களை திருப்திபடுத்தும் கதையை தேர்வு செய்துள்ளார். குழந்தைகளுடன் பார்க்க கூடிய படமாக குடும்பங்களை தியேட்டர்களுக்கு மீண்டும் வரவழைக்கும் படமாக இருக்கும்.

இடையில் உங்களை பார்க்க முடியவில்லையே?

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன். பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள். அப்படியே கிராமத்து பெண் கேரக்டராக இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை. தமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்லா நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க. இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதற்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.

தமிழ் சினிமா இப்போது எப்படி இருக்கிறது?

இப்போது தமிழ் சினிமாவின் கலரே மாறி வருகிறது… ஆலிவுட் படத்துறை மாதிரி மாறிவருகிறது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட வரிசையில் சேர்ந்துவிட்டது. மிக மிக அவசரம், டு லெட், எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம் தான். புதிய இயக்குனர்கள் நல்ல கதைகளோடு வந்தால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here