செங்கல்பட்டு, மே. 28 –

செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும், அருள் பணிசார்லஸ் ஆயரின் செயலர் மற்றும் பங்கு தந்தை அருட்பணி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

இத் திருத்தேர் விழாவில் செங்கல்பட்டு NGGO. நகரைச்  சேர்ந்த பக்தர்கள் மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த  மக்கள் என 500 – க்கும் மேற்பட்டவர்கள் இவ்விழாவில் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

அமல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்கள் அன்னையின் திருநாமத்தைப் பாடினர். அதனைத் தொடர்ந்து திருப்பலி தேர் திருவிழாவை அருள்பணி அகஸ்டின் பிரார்த்தனையுடன் தொடங்கி வைத்தார்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அமல அன்னை திருத்தேர் காமராஜ் நகர், NGGO,நகர், இந்திரா நகர் பகுதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here