மீஞ்சூர், ஏப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில்  திமுக கூட்டணி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, தேர்தல் பரப்பரை கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்.

நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் இரா.கிரிராஜன், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர்,பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் அழகிரி சதாசிவம், மீஞ்சூர் தேர்தல் பொறுப்பாளர் குணசேகரன், மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு தமிழகத்தில் மோடி கூட்டத்திற்கு உ.பி, பெங்காலி, சவுகார்பேட்டையை சேர்ந்தவர்கள்தான் வருவார்கள். தமிழ்நாட்டு மக்கள் அக்கூட்டத்திற்கு வருவதில்லை என்றார் மேலும்  குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  திமுக ஆட்சிதான் எனவும் தற்போது  தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிருக்கான உரிமைத்தொகை, இலவச பஸ் பாஸ், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களால் அவர்களிடையே புதிய  நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்திவுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் கலைஞர் ஐந்து முறை முதல்வராகவும் ,70 ஆண்டுகள் அரசியலையும், 80 ஆண்டுகள் பல தலைவர்களை உருவாக்கியவர். கலைஞர். எனத் தெரிவித்த அவர் மேலும் கடற்கரையில் அறிஞர் அண்ணாவுக்கு சதுக்கம் அமைத்தார். காமராஜருக்கு காந்தி மண்டபத்தில் மணிமண்டபம் கட்டி மரியாதை செலுத்தியவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. எனவும், அந்த மந்திரி சபையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் எம்.பி.யாகி மத்தியில் அமைச்சராகுவார் என்பதும் உறுதியென அப்போது ஆர்.எஸ்..பாரதி தெரிவித்தார்.

மேலும் இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 40 க்கு 40 என்ற அளவில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசினார்.

பொதுமக்கள் திரளாக பங்கேற்ற அக்கூட்டத்தில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன், ஒன்றிய செயலாளர்கள் சுகுமாரன், ஜெகதீசன், ரமேஷ்ராஜ், முத்து,எம்.எல்.ரவி, ஆனந்தகுமார், அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் கணேஷ், சசிகுமார்,பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன்,மீஞ்சூர் சுப்பிரமணி, பொன்னேரி பாஸ்கர்சுந்தரம், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துனைத்தலைவர் அலேக்சாண்டர், அரவிந்த். அத்திப்பட்டு புருஷோத்தமன், வினோத்குமார், கதிர்வேல், கோளூர் கதிரவன் , கோதண்டம், தன்சிங், நிலவழகன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் சார்ந்த மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here