பழவேற்காடு, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.. பொதுமக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தித்துறை ஏற்பாட்டில் பிரச்சார வாகனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் பழவேற்காடு மீன் விற்பனை அங்காடி அருகே விழிப்புணர்வு வரைபடம் வரையப்பட்டு அதன் முன்பு மீனவ இளைஞர்கள் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து 100% வாக்களிப்பது குறித்தும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் மற்றும் மீன்வளத்துறை பொன்னேரி உதவி இயக்குநர் கங்காதரன், ஆய்வாளர்கள் பாரதிராஜா, செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பக்ருதீன், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீனவ பொதுமக்கள் என பலர் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.






















