கும்பகோணம், பிப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் தேசிய அளவில் நடைப்பெற்ற போட்டி மற்றும் அதில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜி மேக்ஸ் அபாகஸ் நிறுவனம் சார்பில் நடைப்பெற்றது.

தேசிய அளவில் நடைப்பெற்ற அப்போட்டியில் ஐந்து வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் அபாகஸ் போட்டியில் பங்கேற்றனர்.

அதில் இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலத்தினைச் சார்ந்த சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அக்ஷயா, தீக்ஷிதா ஸ்ரீ,  திவ்யேஸ், தீரன், நிரஞ்சனா,நிரஞ்சன், ஆதிகேசவ்,தர்சன் ஆகிய எட்டு மாணவர்கள்  100 நொடிக்குள் 100 பெருக்கல் 2Dx1D கணக்குகளை சமன் செய்து VRIKSHA புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பெற்றனர்.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 1200, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மகாமகம் கலையரங்கத்தில் ஜி மேக்ஸ் அபாகஸ் நிறுவனத்தின் இயக்குனர் பழனிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஜி மேக்ஸ் அபாகஸ் இயக்குனர் கலியமூர்த்தி,  பொறுப்பாளர் பழனி மாணிக்கம், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here