பொன்னேரி, ஏப். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த  தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களில் தீவிரமாக சுட்டெரிக்கும் வெய்யிலையும்  பொருட்படுத்தாமல் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக கொடூர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் காலை 7 மணி அளவில் தன் பிரச்சாரத்தை துவங்கியவர், சின்னக்காவனம் பெரிய காரணம் பழவேற்காடு விச்சூர் கம்மவார் பாளையம் உள்ளிட்ட 19 இடங்களில் 30 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

மேலும் இறுதியாக இரவு 10 மணி அளவில் சோழவரம் ஒன்றியம் அருமந்தை பஜார் பகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்தார், செல்லும் இடங்களில் எல்லாம் வேட்பாளர் நல்ல தம்பிக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பினை அளித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசியவர் நான் ஒரு ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும் முழுக்க முழுக்க மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உண்மையான விசுவாசி என்றும், அதனால்தான் எனக்கு அண்ணியார் அவர்களும் ஐயா எடப்பாடியார் அவர்களும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததாகவும் தெரிவித்தார்,

மேலும் நீங்கள் எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்தால் இப்பகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சனைகளையும் மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பேன் என்றும், இல்லையென்றால் உங்களுடன் சேர்ந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடுவேன் என உறுதி அளித்து பேசினார்.

அந்நிகழ்வில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் டில்லி, ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார், பிரகாஷ், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பி.டி.பானு பிரசாத், மாணவர் அணி செயலாளர் ராகேஷ்,  பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், பழவை சுமித்ராகுமார், ஏ.டி. அமிர்தலிங்கம் உள்ளிட்ட திரளான அதிமுக   தேமுதிக, எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here