பொன்னேரி, செப். 08 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிருளப்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலங்கள் அளவெடுக்கும் பணி பணிகள் நடைபெற்றது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுக்கு சொந்தமான பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள், கால்வாய்கள், ஓடைகள், மேய்க்கால்நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை அளவெடுக்க வேண்டும் எனவும், ஆக்கிரமைப்புக்குள்ளான நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்கப்பட்டது.
அதன்படி நேற்று வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித் துறை, மீன் வளத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் நிலம் அளக்கும் பணியினை மேற்கொண்டனர்.
இந்நடவடிக்கைகளை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பணியில் பொன்னேரி துணை வட்டாட்சியர் பாரதி, திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் அன்புசெல்வன், திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை, உதவி ஆய்வாளர் சபாபதி, மீன்வளத் துறை ஆய்வாளர் செல்வம், சிருளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன், மற்றும் சிருளப்பாக்கம் கிராம பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.




















