திருவாரூர், மே. 26 –

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வெகுச்சிறப்பாக தொடங்கியது. இவ்விழா எதிர் வரும் 27 ஆம் ( நாளை ) தேதி வரை நடைபெறுகிறது.   மேலும், பிரசித்திப் பெற்ற இத்தெப்பத் திருவிழாவினை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் திரளானோர் வந்திருந்து இத்தெப்பத் திருவிழாவினை கண்டுகளித்தனர்.

இவ்வாலயம், சைவ சமத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாகும். இவ்வாலயத்தின் தெப்பத்திருவிழா ஆழித்தேர் திருவிழா போன்று சிறப்புபெற்றது. .         பார்ப்பதற்கு ஆலயம் போல் ஓங்கி உயர்ந்து 42 அடிக்கு மேல் அழகு மிளிர காணப்படும் இத்தெப்பமானது 2500 சதுரடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் மேலராஜகோபுர வாயிலையொட்டி 5 வேலி நிலப்பரப்பில் அமையப்பெற்ற  கமலாயத்திருக்குளத்தில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நீர்வளம் செழித்தோங்கவேண்டி குளத்தில் மிதவையாக வலம் வரக்கூடிய தெப்பத்தில் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து ஸ்ரீகல்யாணசுந்தரேசர் சுவாமி எழுந்தள அங்கு விஷேச தீபாரதனை நடைபெற்றது.  இரவு 8 மணிக்கு தொடங்கிய தெப்பத்திருவிழாவானது இன்னிசை கச்சேரிகளுடன் குளத்தில் 3 சுற்றுகள் வீதம் வலம்வந்தபடி  அதிகாலை நிறைவடைந்தது.

 

நேற்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இத்தெப்பத்திருவிழாவானது தினசரி குளத்தின பிரமாண்டமான 4 கரைகளையும் 3 சுற்று வீதம் மொத்தம் 9 முறை குளத்தினை வலம்வருகின்றன.  தினசரி இரவு 8 மணிக்கு தொடங்கும் தெப்பத்திருவிழாவானது விடியவிடிய நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

மின்னொளியில் மிளிரும் தெப்பத்தின் உள்ளே சுமார் 400 பேர் வரை அமர்ந்து தெப்பத்தில் வலம்வரும் நிலையில் தெப்பம் நீரில் மிதந்து வரும் கண்கொள்ளா அழகினை குளத்தின் 4 கரைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டு கண்டுகளித்து தெப்பத்தில் பவணிவரும் ஸ்ரீகல்யாணசுந்தரேச சுவாமியை வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here