திருவாரூர், மே. 26 –

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகளில் இயங்கி வரும்  வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 70 தனியார்  பள்ளிகள் உள்ளது. அப்பள்ளிகளில் மொத்தம் 283 வாகனங்கள் உள்ளதெனவும்தெரிய வருகிறது.

அதனைத் தொடர்ந்து, ஆயுதப்படை மைதானத்தில் தரச்சான்றுகள் வழங்குவதற்கான தனியார் பள்ளி வாகனங்களின் தர ஆய்வினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

அவ்வாய்வுக்கு பின்பு, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சாரு ஶ்ரீ தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் கட்டயமாக காக்கி சீருடை அணிய வேண்டும் எனவும், மேலும், பள்ளி நிர்வாகம் தரும், சீருடைகளை அணியக்கூடாது எனவும், மீறினால் ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது தெரிவித்தார்,

மேலும், வாகனங்கள் தொடர்ந்து சோதனைக்கு உட்பட்டு வருகிறதெனவும் சரிவர விதிகளை பின்பற்றாத  வாகனங்கள் வரும் 30ஆம் தேதிக்குள் வாகனங்களை சரிபடுத்திக் கொண்டு  சோதனைக்கு உட்படுத்த வேண்டும். எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன அப்பொழுது,  12 வாகனங்கள் சோதனையின் போது சரிவர விதிகளை பின்பற்றாமல் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

இவ்வாகனங்கள் எதிர் வரும் மே 30-ஆம் தேதிக்குள் சரிவர  விதிகளை பின்பற்றி மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதும் விதிகளை சரிவர பின்பற்றப்படவில்லை என்றால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here