தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வீரக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தல கொடியேற்று விழா மற்றும் ஆலய திருப்பணிகள் தொடக்க விழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் மதத்தினர் சால்வை அணிவித்து கௌரவிப்பு – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தொடர்ந்து அரை மணி நேரம் வானத்தில் வர்ணஜாலம் காட்டிய ஐபிஎல் நிறைவு விழாவில் பயன்படுத்தப்படும் வண்ண வண்ண வாண வேடிக்கைகள் பார்ப்பவர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வீரக்குறிச்சி – சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் கொடியேற்று விழா மற்றும் ஆலயத் திருப்பணிகள் தொடக்க விழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது.
புனித அந்தோணியார் திருத்தலத்தின் புனரமைக்கப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க சாலை மக்கள் பயன் பாட்டிற்காக தஞ்சாவூர் மறை மாவட்ட துணைத் தலைவர் பேரருள் தந்தை ஜான் ஜோஜப் சுந்தரம் திறந்து வைத்தார். தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் பேரருள்தந்தை டாக்டர் சகாயராஜ் ஆலயத் திருப்பணிகளை அர்ச்சித்து திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பின்னர் சார்ஜா மன்னர் அரண்மனையின் சிறப்பு திட்ட இயக்குனர் எட்வின்மரியஅரசு மின் அலங்கார விளக்குகளை ஒளி ஏற்றி தொடங்கி வைத்தார்.
கொடியேற்றிய பிறகு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் மதத்தினர் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து அரை மணி நேரம் வானத்தில் வர்ணஜாலம் காட்டிய ஐபிஎல் நிறைவு விழாவில் பயன்படுத்தப்படும் வண்ண வண்ண வாண வேடிக்கைகள் பார்ப்பவர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
விழாவில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கானோருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.





















