திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பூவிருந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார்கள்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருவள்ளூரில் மூன்றாவது மிகப் பிரமாண்டமான புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டு இருப்பதாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற முதல் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் 10 நாட்கள் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழா அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டதுதான் இந்த பிரம்மாண்டமான மூன்றாவது புத்தகத் திருவிழா அமைந்துள்ளதாக, அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
அதேப் போல் 2019 டாக்டர் கலைஞர் சென்னையில் அண்ணா நூலகம் துவக்கி வைத்தார்கள். அவரின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் 2023 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமான கலைஞர் நூலகத்தினை திறந்து வைத்துள்ளார். அந்த அளவிற்கு நூலகத்தின் மீது பற்றுள்ளவர் நம் முதல்வர்தான் ஏனென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.
மேலும் புத்தகங்கள் வாசிப்பது என்பது ஒரு அற்புத கலை அந்த கலையினை குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் இருந்து புத்தகங்கள் வாசிப்பது பழகிக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு கற்பனை வளம் மற்றும் சிந்திக்கின்ற திறமை போன்ற பழக்க வழக்கங்கள் உருவாக தூண்டும் எனவும், மேலும் கல்வி ஒன்றுதான் என்றும் மாணவர்களின் வாழ்நாளில் அழியாது எனவும், மேலும் கல்விச்செல்வம் ஒன்றுதான் நம்மோடு அழியாது இருப்பதென்றார்.
திருவள்ளூரில் 10 நாட்கள் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவினை மாணவச் செல்வங்கள் அனைவரும் பல நூல்களை வாங்கி பயன் பெறும் வேண்டும் என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி அறிவுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம் செயலாளர் முருகன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு அவ்விழாவினை மேலும் சிறப்பித்தனர்.



















