திருவாரூர், மார்ச். 09 –

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்படும் டீ சர்ட் டினை, போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல் துறை ஆய்வாளர் வழங்கி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், தொடர்ந்து அந்நிகழ்வின்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த இருச்சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்களை அவர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஒன்றாக வந்த இரு பெண்களும் ஹெல்மெட் அணிந்து வந்தனர். அவர்களையும் நிறுத்தி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த நிகழ்வானது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here