திருவள்ளூர், பிப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து  பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், மேலும் அவர்கள் பாடல் மூலம் பெற்றோருக்கு மரியாதை செலுத்திய நிகழ்வும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

புல்லரம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூதூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவானது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா‌, உதவி ஆசிரியர் வசந்தி, ஆகியோர் தலைமையில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது,

மேலும் அவ்விழாவில் குழந்தைகள் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாக அவர்களின் தனித்திறமையினை வெளிப்படுத்திடும் வகையில் அப்போட்டிகள் அமைந்திருந்தது. என்றால் அதில் வியப்பேதுமில்லை என்றே சொல்லாலம் அந்த அளவிற்கு வெகுச்சிறப்பாக இருந்தது.

மேலும் அவ்விழாவில் தமிழ்நாட்டின் கலாச்சாரமான பரதநாட்டியத்தில் தொடங்கி  பாஞ்சாலி சபதம் நாடகத்தின் வாயிலாக  தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக்கூடாது எனவும், அதேபோன்று கொடிகாத்த குமரன் நாடகத்தின் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை  வலியுறுத்தும் வகையில்  நாடகம் நடைபெற்றது,

மேலும் நகைச்சுவை நாடகமாக தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை மையப்படுத்தி சிறுவர்கள் கணவன் மனைவி வேடமிட்டு நடத்திய நாடகம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இடையே பெருத்த கைத்தட்டல்களை பெற்று அவர்களை மெய்சிலிக்க வைத்தது. .

மேலும் அந்நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோர்களை முன்னிலைப் படுத்தும் வகையில் பாடல்கள் வாயிலாக மரியாதையை செலுத்திய நிகழ்வு பார்வையாளர்கள் அனைவரையும் ஒரு கணம் உணர்ச்சி வயப்படுத்தி விழிவோரம் ஆன்ந்த கண்ணீர் பெருக்கெடுத்தோட கண்டோம்.

மேலும் வெகுசிசறப்பாக நடைப்பெற்ற அக் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர்கள் வீரராகவன், மல்லிகா, வட்டார வள‌ மேற்பார்வையாளர் மிகாவேல், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன்  ஆகியோர் பரிசுகளை வழங்கி தங்கள் வாழ்த்தினை மாணாக்கரோடு பகிர்ந்துக் கொண்டனர்.

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவில் துணைத் தலைவர் மனோகரன், ஆசிரியர் பயிற்றுநர் தமிழரசி,  பள்ளி மேலாண்மை குழு தலைவி நவீன்லா தினேஷ், மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னாளர்கள் ஸ்வேதா எழில் மற்றும் திரளான பெற்றோர் பொதுமக்கள்‌ உள்ளிட்டவர்கள் பங்கேற்று அவ்விழாவினை மேலும் சிறப்படையச் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here