கும்பகோணம், பிப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக நடைப்பெறும்  அதில் மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆறு சைவத் திருத்தலங்களிலும்,  அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி முக்கியம் வாய்ந்ததாகும். அதுப்போன்றே இவ்வாண்டும் இன்று அந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டு உளம் மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைவண திருத்தலங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக அம் மாநகரில் நடைபெறும்.

அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 15ம் தேதி வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் என 5 சைவத்தலங்களிலும் (ஏனைய ஆறு தலங்களில் ஏகதின உற்சவம்) 16ம் தேதி சக்ரபாணிசுவாமி, ஆதிவராகப்பெருமாள், இராஜகோபாலசுவாமி ஆகிய 3 வைணல தலங்களிலும் (பிற இரு தலங்களில் ஏகதின உற்சவம்) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமிகள் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சைவத்தலங்களில் 5ம் நாளில், வியாழ சோமேஸ்வரசுவாமி  காசிவிஸ்வநாதசுவாமி அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 தலங்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள், பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, நறுமண மலர்கள் மாலைகள் சூடி, அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வண்ணம்  திருவீதியுலா வர, வாண வேடிக்கை விண்ணை முட்டும் அளவில் ஓசையெழுப்ப மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி திருவீதிவுலா வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

5 திருக்கோயில்களில் இருந்தும் வந்த ஓலை சப்பரங்கள் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பு அருகே சங்கமித்து பக்தர்களுக்கு ஒரே இடத்தில் இருந்து அருள் பாலித்தனர். அதனை ஏராளமானோர் திரண்டு வந்து கண்டு உளம் உருகி சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

அதுப் போன்று  சக்ரபாணிசுவாமி, ஆதிவராகப்பெருமாள், இராஜகோபாலசுவாமி ஆகிய 3 வைணவ தலங்களிலும் இருந்து பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, நறுமண மலர்கள் மாலைகள் சூடி, அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள, ஓலைச்சப்பரம் சிறப்பாக நடைபெற்றது.  அந்நிகழ்விலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here