பொன்னேரி, மார்ச். 14 –
தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம் ( நாளை ) தேதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில் துவங்கயிருக்கும் அக்கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிவிவி தினகரன் ஆணையின் படியும் , தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான, செந்தமிழன் அறிவுறுத்தல் படியும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக சார்பில் நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமை வகித்து கட்சியின் நிர்வாகிகளுடன் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை அப்போது வழங்கினார்.
மேலும் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற 15ஆம் தேதி கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவதெனவும், மேலும் அந்நாளில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கு கட்சியின் தலைவரை நேரடியாக சந்திக்கவும் ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள். ஒன்றிய , பேரூர் கழக பொறுப்பாளர்கள், ஊராட்சி, வார்டு உறுப்பினர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.























