கும்பகோணம், டிச. 19
தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி மாவட்டமாகவும், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், மாவட்ட பதிவு அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், நாடு முழுவதும் இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியின் தலைமையகமும், கும்பகோணம் மறை மாவட்டமும், தமிழகத்தின் 2வது மிகப்பெரிய காய்கறி சந்தையையும், உலக நாடுகளை கவர்ந்த ஐம்பொன் சிலை தயாரிப்பில் உலக பிரசித்தி பெற்ற சுவாமிமலை, அதுபோல உலக அளிவில் பிரசித்தி பெற்ற நாச்சியார்கோயில் குத்துவிளக்கு தயாரிப்பு பட்டறைகளும், அமைய பெற்று, இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புக்களை கொண்ட மாநகரம்தான் கும்பகோணம்.
மேலும் நாடு தழுவிய அளவில், கும்பகோணம் கொழுந்து வெற்றிலையும், கும்பகோணம் டிகிரி காபிக்கும் சிறப்பு பெயர் பெற்றது என்றால் அது மிகையல்ல. அதுப்போன்று பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்களை தன்னகத்தேக் கொண்ட ஆன்மீகப்பூமியாகவும் விளங்குகிறது. அதனால் பல் மாவட்ட மாநில சர்வதேச அளவிலான ஆன்மீக சுற்றிலாவிற்கு நாள்தோறும் வந்து போகும் இடமாகவும் அம் மாநகர் விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற அம் மாநகரின் மையத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்ற நிலையில், அங்கு இருக்கும் பேருந்து நிலையத்திற்கு சரியான சாலை வசதி, கழிப்பறை வசதி, கழிவு நீர் வசதி, இல்லாமல் மிகுந்த அவல நிலையில் இருப்பதாக அதனைக் காட்சிப் படுத்தி அக் காட்சிகள் நிறைந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் அந்நிலையை கிண்டலடிக்கும் வகையில் சொர்க்கமே என்றாலும் நம் ஊரை போல வருமா என்று பாடலுடன் பேருந்து நிலைய அவல நிலை குறித்து வீடியோக்கள் பதவி வருகிறது. இதேபோன்று கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை வசதி கழிவுநீர் வசதி இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.




















