மயிலாடுதுறை, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி அடுத்துள்ள இளந்தோப்பு கிராமத்தில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலயம் மிகவும் பழைமையானதாகும். மேலும் அவ்வாலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் அவ்விழாவினை முன்னிட்டு யாகசாலை அமைக்கபட்டு, புனித நீர் கடங்களை வைத்து வேத விற் பன்னர்களால் இரண்டு கால யாக பூஜை நடத்தப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மேள தாளம் வாண வேடிக்கை முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதி, புனித நீர் கடங்களை தலையில் தூக்கி. சென்று விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிசேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.
மேலும் அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், கிராம மக்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் மற்றும் கோபுரத் தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் சுவாமி அருள் பிரசாதம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.