சீர்காழி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி .அதிமுகவினர் பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
மேலும் நீர் மோர் தர்பூசணி குளிர்பானங்களை சாலையில் சென்ற பொதுமக்களுக்கும்,பேருந்தில் சென்ற பயணிகளுக்கு அளித்தனர். மேலும் சீர்காழி தென்பாதி கதிர்காம பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சங்கல்பம் அர்ச்சனை செய்து அதிமுகவினர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து அதிமுகவினர்கள் தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.




















