கும்பகோணம், ஏப். 09 –
கும்பகோணம் அருகே சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மானம்பாடி காளியம்மன் கோவில் அருகே வரும் பொழுது அப்பகுதியை சேர்ந்த சைக்கிளில் சென்ற பாலசுப்பிரமணியன் என்பவர் குறுக்கே வர அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திரும்பிய போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருவாய்பாடி சேர்ந்த சக்திவேல், செல்வம் என்பவர்கள் மீது மோதிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் இறங்கியது.
பேருந்து மோதியதில் செல்வம் (55) சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் படுகாயமடைந்த சக்திவேல் (45) கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த சோழபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


















