சீர்காழி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
சீர்காழியில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் அப்பகுதி மக்களை தேடி தேடி சென்று அவர்களின் தாகத்தையும் களைப்பையும் போக்கும் வகையில் 1 டன் தர்பூசணி, 1000 பனை நுங்கு, 500 இளநீர், 3 ஆயிரம் குளிர்பானம், ரோஸ்மில்க், பாதாம்மில்க், நீர்மோர் என அனைத்தையும் வழங்கி தனது பிறந்த நாளை பயனுள்ளதாக கொண்டாடினார் அப்பகுதியை ச்சார்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர். அவர் செயல் பாட்டினை வியந்து அப்பகுதி மக்கள் அவருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்ப்பட்டுள்ளது. சீர்காழி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் மார்கோனி பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஆயிரம் லிட்டர் நீர் மோர், ஒரு டன் தர்பூசணி 500 இளநீர், ஆயிரம் பனை நுங்கு, மூவாயிரம் குளிர்பான பாட்டில்கள், கேழ்வரகு கூழ், ரோஸ் மில்க், பாதாமில் என பெரிய அண்டாக்களில் வைத்து கோடை உஷ்ணத்தை தணிக்கும் வகையில் அனைத்து விதமான குளிர்பானங்கள் என பொதுமக்களுக்கு வழங்கினார்.
பிரதான சாலையில் சென்ற பேருந்துகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் நீர் மோர் வழங்குவதை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேடி தேடிச் சென்று அதிமுகவினர் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு குளிர்பானங்கள் தர்பூசணி இளநீர் நுங்கு ஆகியவற்றை வழங்கியது பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.





















