தஞ்சாவூர், ஏப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

உப்பு சத்தியாகிரகம் 94ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை வந்த தண்டி யாத்திரை குழுவினர் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வேதாரண்யம் புறப்பட்டு சென்றனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தினார். திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடந்து சென்று காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் 94ம் ஆண்டு நினைவு தினத்தை காங்கிரஸ் கட்சியினர் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகிறைனர்.

அதன்படி 94ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தண்டி யாத்திரை குழுவினர் திருச்சியில் இருந்து புறப்பட்டு வேதாரண்யம் செல்லும் வழியில் தஞ்சை வந்தனர். அவர்களை தஞ்சை மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் வரவேறறார்.

பின்னர் தஞ்சை  ரயில் நிலையததில் இருந்து பாத யாத்திரையாக தஞ்சை மாநகராட்சி அலுவலகம் வந்தனர். அங்கு உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் வேதாரண்யம் புறப்பட்டு சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here