இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.

இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை” என்பது இந்த வருட மாநாட்டின் மையக்கருவாகும்.

பாதுகாப்பு அமைச்சர்,  வெளியுறவு அமைச்சர் மற்றும் பெட்ரோலியம்  &  இயற்கை எரிவாயு அமைச்சர் மாநாட்டில் உரையாற்ற வுள்ளனர். பல்வேறு அமர்வுகளுக்கும் ஏற்பாட்டு செய்யப் பட்டுள்ளது.

இந்திய-பசிபிக் கடல்சார் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் மாற்றங்கள் குறித்த விரிவான விவாதத்திற்கான தளத்தை இந்த கூட்டத்தின் மூலம் இந்திய கடற்படை மற்றும் தேசிய கடல்சார் அமைப்பு தொடர்ந்து வழங்குகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here